மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!

மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
X

தனியார் பள்ளி வாகனங்களை சோதனை இட வந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 79 பள்ளிகளைச் சேர்ந்த 232 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஓட்டுனர்களுக்கு உடல் தகுதி மற்றும் கண் பரிசோதனை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி தாலுகாக்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்கள் செயல்திறன் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டாய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் மயிலாடுதுறை, மாவட்டத்தில் உள்ள 79 பள்ளிகளைச் சேர்ந்த 232 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

பள்ளி வாகனங்களில் தீயணைப்பான், முதலுதவிப் பெட்டி, வாகனத்தின் இருக்கைகள் மற்றும் தளம், வாகன சக்கரத்தின் தன்மை, ஆவணங்கள், பதிவுச்சான்று, அனுமதிச்சீட்டு, உள்ளிட்ட வாகனத்தின் தகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு இலவச உடல் மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக விபத்து மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாத்துக் கொள்வது குறித்தான வழிமுறைகளை மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.


செய்தி ஒரு கண்ணோட்டம்

மயிலாடுதுறை: பள்ளி வாகனங்கள் தீவிர ஆய்வு - தீயணைப்பு வழிமுறைகளும் விளக்கம்

மயிலாடுதுறை, மே 11: மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில், போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து பள்ளி வாகனங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இன்று காலை நடைபெற்ற இந்த சோதனையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 79 பள்ளிகளுக்கு சொந்தமான 232 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வில் என்னென்ன சோதிக்கப்பட்டது:

  • தீயணைப்பான் மற்றும் முதலுதவிப் பெட்டி இருப்பதை உறுதி செய்தல்
  • வாகன இருக்கைகள் மற்றும் தளத்தின் பாதுகாப்பு நிலை
  • வாகன சக்கரங்களின் தன்மை மற்றும் நிலை
  • தேவையான ஆவணங்கள், பதிவுச்சான்று மற்றும் அனுமதிச்சீட்டுக்கள் சரிபார்க்கப்பட்டது
  • பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு என்னென்ன வசதிகள்:

இலவச உடல் மற்றும் கண் பரிசோதனைகள் நடத்தப்பட்டன

விபத்து மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாத்துக் கொள்வது குறித்த வழிமுறைகளை மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

முக்கிய கருத்து:

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பள்ளி வாகனங்களின் தகுதி மற்றும் ஓட்டுநர்களின் திறனை சோதிக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது போன்ற முன்முயற்சிகள், பள்ளி மாணவர்களின் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற உதவும்.

-மயிலாடுதுறை செய்தியாளர் கனி

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings