/* */

காஞ்சிபுரத்தில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்.பி ஆக உள்ள செல்வம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம்.
X

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய எம்.பி  செல்வம்.

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அவ்வகையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிகளை பிரதான கட்சிகள் துவங்கி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடுடன் நிறைவு பெற்றது.

நேற்று திமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பினை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டார். அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய வழக்கறிஞர் செல்வம் மீண்டும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வம் கடந்த 2014இல் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையில், மீண்டும் 2019-ல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த ஐந்தாண்டுகளாக பணியாற்றி வந்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் , முக்கிய சாலை சந்திப்புகளில் விபத்துகளை தவிர்க்க உயர்மின் கோபுர விளக்கு , பொதுமக்கள் பேருந்திற்காக காத்திருக்கும் நிலையில் அனைத்து வசதிகளின் கூடிய நிழற்குடை என பல வகைகளில் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டார்.

அதுமட்டுமில்லாத தமிழ் மீது தீவிர பற்று கொண்ட இவர் தனது பணிகள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து இடங்களிலும் அந்த பணிக்கு ஏற்ப திருக்குறளை அந்த இடத்தில் பதிவு செய்வது தவறுவதில்லை.

இது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்த நிலையிலும், தற்போது மீண்டும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து தரப்பு மக்களும் தனக்கு மீண்டும் ஆதரவு தெரிவிப்பார்கள் என தெரிவித்தார்.

வேட்பாளராக அறிவிப்பு செய்த பின் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்தும், காஞ்சி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட அண்ணா மற்றும் கருணாநிதி திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அனைத்து பகுதி நிர்வாகிகளை சந்தித்து மீண்டும் தனக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Updated On: 21 March 2024 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்