/* */

வன்னியர் மக்கள் கட்சி சார்பில் காஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

10.5% இட ஒதுக்கீடு தீர்ப்பு நிலுவையில் இருப்பதால் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகளை இரண்டு மாதம் காலம் தாழ்த்தி வெளியிட கோரிக்கை

HIGHLIGHTS

வன்னியர் மக்கள் கட்சி சார்பில் காஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

வன்னியர் மக்கள் கட்சி சார்பில் காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது

10.5% இட ஒதுக்கீடு தீர்ப்பு நிலுவையில் இருப்பதால் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகளை தீர்ப்பு வரும் வரை இரண்டு மாதம் காலம் தாழ்த்தி வெளியிட வேண்டுமென தமிழக அரசிடம் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் வேண்டுகோள் விடப்பட்டது.

வன்னியர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக மாநில அரசின் கல்வி அரசு வேலைவாய்ப்பில் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு, திமுக ஆட்சியில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது. தமிழக அரசு உரிய அடிப்படையில் சிறப்பு தீர்மானம் இயற்றி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்கலாம் என உச்சநீதிமன்ற அறிவித்ததை எடுத்து 13 மாதங்கள் ஆகி தற்போது வரை திமுக அரசு இட ஒதுக்கீடு வழங்காமல் திட்டமிட்டு வன்னிய சமுதாயத்தை வகித்து வருவதாக கண்டித்து தமிழக முழுவதும் வன்னியர் மக்கள் கட்சி மாவட்ட வாரியாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் வன்னியர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சக்தி படையாட்சி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் நிறுவன தலைவர் சக்தி படையாட்சி பேசுகையில், நீதிமன்றத்தில் 10.5% இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பில் நிலுவையில் இருப்பதை ஒட்டி டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து தீர்ப்பு வரும் வரை இரண்டு மாதம் காலம் தாழ்த்தி வெளியிட வேண்டுமென தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே வன்முறை கலாச்சாரங்கள் அதிகரிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இடைத்தேர்தலில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனை வன்னியர் மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வன்னியர் மக்கள் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 25 Feb 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  4. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  5. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  7. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  9. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  10. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...