/* */

வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் அனைத்து தரப்பினரும் பரிசோதனைகளில் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் செல்ல உள்ள அனைத்து தரப்பினரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்

HIGHLIGHTS

வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் அனைத்து தரப்பினரும் பரிசோதனைகளில் பங்கேற்பு
X

தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தல் 2021 ன் வாக்கு எண்ணிக்கை வரும் மே இரண்டாம் தேதி அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணிக்கு துவங்க உள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் அரசு அலுவலர்கள் , வேட்பாளர்களின் முகவர்கள் , காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைத்து நபர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் காண்பித்த பிறகே வாக்கு மையத்திற்கு அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவான 4 சட்டமன்ற தொகுதிகள் வாக்கு எண்ணிக்கையில் பணிபுரிய உள்ள 760 அரசு அலுவலர்கள் காவல் துறையினர் , பத்திரிக்கையாளர் வேட்பாளர்களின் முகவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கான பரிசோதனை சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாக கூட்டரங்கு மற்றும் செவிலிமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சுகாதார துறை அலுவலர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பங்கேற்ற அனைவருக்கும் குறுஞ்செய்திகள் மூலம் பரிசோதனை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் , முடிவுகள் விரைவில் அந்தந்த அலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Updated On: 29 April 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்