/* */

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸார் கைது

ராகுல் காந்தி மீது பொய் வழக்கு மற்றும் அவதூறு செயல்களை மேற்கொள்ளும் மத்திய அரசு கண்டித்து காஞ்சி மாவட்ட காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸார் கைது
X

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் நோக்கி ரயில் மறியலில் ஈடுபட வந்த காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையிலான காங்கிரஸார்.

ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் செய்ய முயன்ற போது இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் காவல்துறையினரால் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ராகுல் காந்தியின் எம்பி பதவியை மக்களவை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதனால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் ஜவகர்லால் தெருவில் இருந்து 200க்கும் மேற்பட்ட காங்கிரஸார் ஊர்வலமாக புதிய ரயில் நிலையம் செல்ல முயன்ற போது ரயில் நிலையம் அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை தொடர்ந்து இருபது நிமிட நேரம் எழுப்பி தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் ரயில் மறியலுக்கு காங்கிரஸ் சார்பென்ற போது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கும் இவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸாருக்கும் , காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது.

மேலும் தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்ட போதும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும், இதனை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் எதிர்ப்பை பாஜக எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்தனர்.

பின்னர் காங்கிரஸார் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் என அதிக அளவில் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தி கைது மற்றும் பதவி நீக்கம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸார் பல்வேறு பகுதியில் கடந்த பதினைந்து தினங்களாகவே பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 15 April 2023 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா