மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மகளிர் சுய உதவி குழுவினர்.
திருவள்ளூர் அருகே மகளிர் குழுவில் பணம் கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் மகளிர் குழு உறுப்பினர் மண்டை உடைக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் மீது வழக்குப் பதிவு செய்தும் இன்று வரை புல்லரம்பாக்கம்போலீசார் குற்றவாளியை கைது செய்யாதது ஏன் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் புகார் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ராமதண்டலம் கிராமத்தில் சுமார் 15 பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட அல்லி மகளிர் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவிற்கு மாதம் தோறும் சந்தா தொகை கட்ட வேண்டும் என்ற நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29.ஆம் தேதி ராம தண்டலம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா அவரது அம்மா காஞ்சனா ஆகிய இருவரும் அல்லி மகளிர் குழுவில் உறுப்பினராக உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி குழுவின் தலைவி முன்னிலையில் குழுவிற்கு பணம் கட்ட சென்றபோது தங்கமணி என்ற உறுப்பினர் சந்தா பணத்தை கட்டவில்லை எனவும் அவர் கட்டினால் மட்டுமே மற்ற உறுப்பினர்களுக்கு பணத்தை பிரித்து அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என சங்கத்தின் தலைவி கூறியதை தொடர்ந்து சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கமணியை சந்தித்து சந்தா தொகை செலுத்தும் படி தெரிவித்துள்ளனர்.
ஆனால் சந்தா தொகை கட்ட முடியாது என தகாத வார்த்தைகளால் பேசியதுடன் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்த தங்கமணியின் மகன் அன்பரசு காஞ்சனாவை கட்டையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கியுள்ளாராம். இதில் காயமடைந்த காஞ்சனா ரத்தம் சொட்ட சொட்ட திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் காஞ்சனாவை தாக்கிய அன்பரசு மீது பவித்ரா திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையிலும் இதுவரை அன்பரசுவை கைது செய்யப்படவில்லை. மேலும் ஊரில் சுற்றி வரும் அன்பரசு, தகாத வார்த்தைகளால் பேசி வருவதோடு எந்த காவல்துறையும் என்னை ஒன்றும் செய்ய முடியாது காவல்துறையினருக்கு நான் பணம் கொடுத்து விட்டேன் என திமிருடன் பேசியதாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளி அன்பரசுவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu