/* */

ஒரு வாக்காளர் கூட இல்லாத இடத்தில் மாதிரி வாக்கு சாவடி மையம் வாகன துவக்க விழா

நடமாடும் மாதிரி வாக்குசாவடி மைய துவக்க விழாவில் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை என புகார் தெரிவித்த கல்லூரி மாணவிகள்

HIGHLIGHTS

ஒரு வாக்காளர் கூட இல்லாத இடத்தில் மாதிரி வாக்கு சாவடி மையம் வாகன துவக்க விழா
X

நடமாடும் மாதிரி வாக்கு சாவடி மையத்தில் ஆட்சியரிடம் பதிலளிக்கும் கல்லூரி மாணவி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 100 சதவீத வாக்குப்பதிவு மேற்கொள்ள வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.

இதற்காக சில தினங்களுக்கு முன்பு பேருந்து நிலையம் , நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மாதிரி வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று நடமாடும் மாதிரி வாக்குசாவடி வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் மகளிர் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்ற பின் துவக்கி வைப்பதாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்ற பின் அதற்கான துண்டு பிரசுரங்களை மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கி வாக்களிக்க கோரி கூறினார். அப்போது ஆட்சியர் அங்குள்ள மாணவிகளிடம் வாக்காளர் அடையாள அட்டை எத்தனை பேர் வைத்துள்ளீர்கள் எனக் கேட்டபோது குறைந்த எண்ணிக்கையிலேயே கைகளை உயர்த்தி பதிலாக அளித்தனர்.

மாணவிகளிடம் ஏன் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவில்லை என்று கேட்ட போது, தங்கள் வயது 19 எனவும் கடந்த நவம்பரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பதிவு செய்து தற்போது வரை வாக்காளர் அடையாள அட்டை எங்களுக்கு கிடைக்கவில்லை என பதில் கூறியதை கேட்டு ஆட்சியர் அதிர்ந்தார்.

உடனடியாக இது குறித்து அருகில் இருந்த அலுவலரிடம் தெரிவித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் மாதிரி வாக்கு செலுத்த கூட ஓரு சில மாணவிகளை தவிர வாக்காளர் இல்லை என்பது அறிந்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து சென்றார்.

Updated On: 9 Feb 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!