/* */

மழை பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு

குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது

HIGHLIGHTS

மழை பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு
X

குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் தூய்மை பணிகள் மேற்கொண்டது குறித்து விளக்கங்களை கேட்டு அறிந்த ஆட்சியர் கலைச்செல்வி.

திங்கள்கிழமை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்த நிலையில் , நீர் குடியிருப்பு பகுதிகள் பள்ளி வளாகங்கள் சாலைகள் என அனைத்து பகுதிகளில் சூழ்ந்திருந்தது.

இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதி நேற்று வரை விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் வட்டங்களில் பள்ளிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே திறக்கப்பட்ட நிலையில், ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வட்டங்களில் தற்போது நீர் வடிந்து வரும் நிலையில் வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பள்ளிக் கல்லூரி மாணவர்களின் கருதி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், பள்ளிகளில் தூய்மைப் பணிகள், மின்சாரப் பொழுதுகள் குடிநீர் தொட்டி மற்றும் கழிவறைகள் அனைத்தும் தூய்மைப்படுத்த அறிவுறுத்தி இருந்தது. மேலும் பள்ளி வளாகத்தில் நீர் சூழ்ந்துள்ளாதபடி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கொளப்பாக்கம் மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மேலும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு அவசியம் என்பதையும் அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது நடக்க வேண்டிய அரையாண்டு பள்ளி தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 9 Dec 2023 4:06 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்