/* */

காவலரே விதிமீறலாமா? காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

காஞ்சிபுரத்தில், காவலர் ஒருவருடன் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை, சமூக நலத்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

HIGHLIGHTS

காவலரே விதிமீறலாமா? காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
X

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த, காவலராக பணிபுரிந்து வரும் ஒரு நபருக்கு , அதேபகுதியை சேர்ந்த 18 வயதுக்கு குறைவான பெண்ணுடன் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது.

நேற்றிரவில் இருந்து திருமண பணிகள், மண்டபத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலருக்கு, தொலைபேசியில் குழந்தை திருமணம் குறித்த தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, திருமண மண்டபத்திற்கு வந்த சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு மைய அலுவலர்கள், திருமண பெண்ணின் வயது குறித்த சான்று ஆவணங்களை கேட்டபோது, இன்னும் ஒரு மாதத்திற்கு பின்பு, 18 வயது நிறைவு பெற இருப்பதாக கூறினர்.

எனினும், தற்போது சட்டப்படி திருமணம் நடத்த இயலாது எனக்கூறிய அதிகாரிகள், இளம்பெண்ணை செங்கல்பட்டு அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து, மணமகனிடம் சமூக நலத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் ஒருவரே சட்டத்திற்கு புறம்பாக குழந்தை திருமணத்தில் ஈடுபட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 9 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு