/* */

குடியிருப்போர் நல சங்கம் சார்பில் செஸ் ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு.

ஒருங்கிணைந்த அறிஞர் அண்ணா நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி.

HIGHLIGHTS

குடியிருப்போர் நல சங்கம் சார்பில் செஸ் ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு.
X

ஒலிம்பியாட் செஸ் திருவிழா விழிப்புணர்வு போட்டி

காஞ்சிபுரத்தில், குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஒலிம்பியாட் செஸ் திருவிழா விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் வையாவூர் ரோட்டில், ஒருங்கிணைந்த அறிஞர் அண்ணா நகர் குடியிருப்போர் நல சங்கம் உள்ளது.

இச்சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள, 44 வது ஒலிம்பியாட் திருவிழாவிற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடியிருப்போர் சங்கத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவியருக்கான செஸ் போட்டி, அங்குள்ள அம்மா பூங்காவில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டியில் 6வயது முதல் 18 வரையிலான நூற்றுக்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் செஸ் போர்டு மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. குடியிருப்போர் நல சங்கத்தில் பத்தாம், பதினொன்றாம், மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று நன்றி இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவிய மாணவியருக்கு பதக்கங்கள் அணிவித்து, நல சங்கத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் குமார், மாமன்ற உறுப்பினர்கள் பானுப்பிரியா சிலம்பரசன், இலக்கியா சுகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் பிரசாந்த், கோனேரி குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சைலஜாசேகர், குடியிருப்போர் நல சங்க தலைவர் பாஸ்கரன், பொருளாளர் சுரேஷ் மற்றும் குடியிருப்பு சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கறே்றனர்




காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த அறிஞர் அண்ணா குடியிருப்போர் நல சங்கம் சார்பில், ஒலிம்பியாட் செஸ் விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவியர்.

Updated On: 24 July 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்