/* */

பரிசீலனையின்போது வேட்பாளருடன் கூடுதலாக ஒருவருக்கு அனுமதி: அதிமுக கோரிக்கை

வேட்புமனு பரிசீலனை போது கூடுதலாக ஒருவரை உடன் அனுமதிக்க வேண்டும் என காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

HIGHLIGHTS

பரிசீலனையின்போது வேட்பாளருடன் கூடுதலாக ஒருவருக்கு அனுமதி: அதிமுக கோரிக்கை
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த அதிமுக மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையிலான வேட்பாளர் குழுவினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய நிலையில் மூன்று நாட்கள் குறைந்த அளவே நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதன்பின் வேட்புமனுத் தாக்கல் செய்ய அரசியல் கட்சி தீவிரம் காட்டியதால் விருவிருப்படைந்தது. வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கடந்த இரண்டு நாட்களாக காவல்துறை கெடுபிடி செய்ததால் வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் காவல்துறைக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை செய்வது, வேட்பாளருடன் அவரது வழக்கறிஞர் அல்லது அவரது உறவினர் ஒருவரை மாவட்ட ஆட்சியர் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் வி சோமசுந்தரம் தலைமையிலான வேட்பாளர் குழுவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60 சதவீதத்துக்கு மேல் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் போதிய அனுபவம் இல்லை எனவும், அவர்களுக்கு சட்ட ரீதியாக உதவி புரிய வழக்கறிஞர்களும் அனுபவம் பெற்ற உதவியாளர்களும் இருந்தால் வேட்புமனு பரிசீலனை முறையாக நடைபெற வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாக வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் பெண் வேட்பாளர் மனதளவில் அச்சத்துடன் குழப்பத்துடனே வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று வேட்புமனு பரிசீலிக்கும்போது அவர்களுக்கு உதவ கட்டாயம் ஒரு நபர் தேவை என்பது நிதர்சனமான கோரிக்கையாக உள்ளது.

Updated On: 5 Feb 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...