/* */

36 வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணம்: அதிமுகவினர் சாலைமறியல்

காஞ்சிபுரம் 36 வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொள்ள கோரி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

36 வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன்  மரணம்: அதிமுகவினர் சாலைமறியல்
X

திடீரென மரணமடைந்த காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 36-வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் ஜானகிராமன் எனும் 35 வயது இளைஞர் போட்டியிடுகிறார்.

நேற்று வரை தனது வார்டு பகுதியில் வாக்கு சேகரித்து வந்த நிலையில், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு அங்கு வந்த அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டில் அவரது தம்பியுடன் உறங்கி வந்த நிலையில் , அவரது தம்பி இயற்கை உபாதைக்காக எழுந்தபோது ஜானகிராமன் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை தூக்க முயற்சித்த போது அவரது கழுத்தில் இறுக்கமான துண்டுகள் சுற்றப்பட்டிருந்தது.

அதனை அகற்றி அருகிலிருந்த நபர்களுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிர் இழப்பு ஏற்பட காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் உயிரிழந்ததால் அந்த வார்டு பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்படும் என தெரிய வருகிறது.


இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த மூன்று தினங்களாக அவருக்கு வந்த அவரது கைபேசி உரையாடலை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோட்டை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளரின் சமரசத்தின் பேரில் முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதுகுறித்த புகார் மனு அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 10 Feb 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு