/* */

காஞ்சிபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

காஞ்சிபுரம் மாவட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தில் 1130 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிப்பு

HIGHLIGHTS

காஞ்சிபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் 2021ல் பதிவான மிண்ணனு வாக்குபதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் பொன்னேரிகரையில் அமைந்துள்ள அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரியில் மூன்று கட்ட பாதுகாப்பில் உள்ளது.

நாளை மறுநாள் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ளது. வாக்குபதிவு அன்று ஊரடங்கு அமலில் உள்ளதாலும் வாக்கு எண்ணிக்கையின்போது‌ எந்த வித அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளி பாதுகாப்பில் 784 காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு , போக்குவரத்து உள்ளிட்ட பணிகளை கவனிக்கின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 5 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 346 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதை தவிர துணை ராணவத்தினரும் வாக்கு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Updated On: 30 April 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...