/* */

உள்ளாட்சி தேர்தல் மோதல் - 5 பேருக்கு 2 வருட சிறை

உள்ளாட்சி தேர்தல் மோதல் - 5 பேருக்கு 2 வருட சிறை
X

வாலாஜாபாத் அருகே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற மோதலில் 5 பேருக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டத்தைச் சேர்ந்த மருதம் கிராமத்தில் கடந்த 2013 ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது அதிமுகவை சேர்ந்த முருகன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முயற்சித்ததாக வாலாஜாபாத் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் கடந்த 2013-ல் வழக்கு பதியப்பட்டு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இதில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் வாதிட்டார். இந்த வழக்கில் நேற்று மாலை காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணகுமார், எதிரிகளான இளஞ்செழியன் , கஜேந்திரன் , ராஜேந்திரன் ராமு மற்றும் யுவராஜ் ஆகிய ஐந்து பேர்களுக்கும் இரண்டு வருட சிறை தண்டனையும் தலா 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Updated On: 19 Feb 2021 6:07 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு