/* */

தொழிற்சாலையில் மரம் நட வேண்டும் - ஆட்சியர்

தொழிற்சாலையில்  மரம் நட வேண்டும் - ஆட்சியர்
X

சுற்றுசூழலை பாதுகாக்க தொழிற்சாலை வளாகத்தில் மரம் நடவேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனைத்து தொழிற்சாலை பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தொழிற்சாலை பிரதிநிதிகளிடம் பல்வேறு குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் நிர்வாகிகளிடையே உரையாற்றுகையில் ,காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாயிரம் தொழிற்சாலைகள் உள்ள நிலையில் தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, மண் மற்றும் உலோக துகள்கள், கழிவுநீரால், நிலம், நீர், காற்று மாசுபடுகின்றன. காற்று மாசுபடுவதை தவிர்க்க, குடியிருப்பு பகுதிகள், சாலையோரத்தில் அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். குறிப்பாக தொழிற்சாலை வளாகங்களில் 25 சதவீத இடத்தில் மரங்களை வளர்த்து பராமரிக்க வேண்டுமென தொழிற்சாலை நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் வைத்தார்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினை முறையாக சுத்திகரிப்பு செய்து அதன் பிறகு தான் வெளியேற்ற வேண்டும். திறந்தவெளி பகுதியிலோ அல்லது மழை நீர் செல்லும் கால்வாய்களிலோ , நீர் ஆதாரங்களிலோ திறந்து விடக் கூடாது. இதனை மீீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

Updated On: 11 Feb 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?