/* */

விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாளாக உயர்த்த வேண்டும் எனக் கோரி தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்   ஆர்ப்பாட்டம்
X

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 200நாள் வேலையாக மாற்ற வேண்டும். தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தவேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து நேர்மையாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழுதடைந்த தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு புதிதாக 400 சதுர அடியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகளை கட்டிக்கொடுக்கவேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிகேஎம்யூ மாவட்டத்தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். பிகேஎம்யூ ன் மாநில நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடாசலம் மற்றும் மாவட்ட செயலாளர் முருகன் சிபிஐ ன் ஈரோடு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஒன்றிய செயலாளர் கனகராஜ் மற்றும் கோபாலன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 9 Feb 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...