/* */

ஈரோடு மாவட்டத்தில் படைவீரர்களின் நலனுக்காக கொடி நாள் நிதி வசூல்

படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதி செலுத்தி வசூல் துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் படைவீரர்களின் நலனுக்காக கொடி நாள் நிதி வசூல்
X

ஈரோட்டில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உண்டியலில் நிதி செலுத்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூல் பணியினை துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாள் நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் படைவீரர் கொடிநாள் நிதிவசூல் பணி துவக்கி வைக்கப்படுகிறது. அதன்படி நேற்று ஈரோடு ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உண்டியலில் நிதி செலுத்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூலினை துவக்கி வைத்தார். மேலும், ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதிவசூல் இலக்காக ரூ.1,36,76,000/- நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.1,49,35,000/- நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது அரசு நிர்ணயித்த நிதி வசூல் இலக்கிற்கும் அதிகமாக ஈரோடு மாவட்டம் 109.2% அளவில் நிதி வசூல் செய்து இருந்தது.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் படைவீரர் கொடிநாள் 2021 நிதி வசூலினை அதிக அளவில் வசூல் செய்த அனைத்து துறை மாவட்ட அலுவலர்களுக்கும் மற்றும் படைவீரர் கொடிநாள் நிதி வசூலுக்கு நிதி வழங்கிய பொதுமக்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், இவ்வாண்டிற்கான படைவீரர் கொடிநாள் 2022 நிதிவசூல் இலக்காக ஈரோடு மாவட்டத்திற்கு ரூ. 1,44,47,000/- மற்றும் மாநகராட்சிக்கு ரூ.4,39,000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த வருடமும் இதே போல் அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் செய்திட வேண்டும் என்று அனைத்துத் துறை அலுலர்களையும் மற்றும் தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்களையும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி கேட்டுக் கொண்டார்.

மேலும், 2019-ஆம் ஆண்டில் ரூ.3,00,000/-க்கும் அதிகமாக நிதி வசூல் புரிந்த மாவட்ட அலுவலர்களுக்கு அரசு முதன்மை செயலர் அவர்களால் வழங்கப்பட்ட 30 கிராம் வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 2021-ஆம் ஆண்டில் ரூ.1,50,000/- க்கும் மேல் கொடிநாள் நிதிவசூல் புரிந்த மாவட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, முப்படையினரின் தன்னலமற்ற சேவையினை நினைவுகூர்ந்து நன்றி பாராட்டும் வகையில் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை அழைத்து கொடிநாளன்று மாவட்ட ஆட்சித்தலைவரால் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. மேலும், 23 நபர்களுக்கு ரூ.5,87,000/- மதிப்பீட்டில் தொகுப்புநிதி கல்வி உதவித்தொகையினையும், 8 நபர்களுக்கு ரூ.43,448/- மதிப்பீட்டில் கண்கண்ணாடி நிதியுதவியினையும் மற்றும் 1 நபருக்கு புற்றுநோய் நிவாரண நிதியுதவியாக ரூ.28,000/- என 32 நபர்களுக்கு ரூ.6,58,448/- மதிப்பீட்டிலான முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, பிளைட் லெப்.மணிவண்ணன் (ஓய்வு), துணை இயக்குநர் (முன்னாள் படைவீரர் நல அலுவலகம்), மாவட்ட முப்படைவீரர் வாரிய உபதலைவர் பிரிகேடியர். எஸ். குமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Dec 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்