/* */

குளங்கள் நிரம்பி மறுகால் ஓடுவதால் நகர வீதிகளில் வெள்ளப்பெருக்கு

மழைநீர் செல்லும் சாலை ஓடைகளில் ஆக்கிரமிப்பு செய்ப்பட்டுள்ள காரணத்தால் மழை நீரானது தார் சாலை வழியாக நகருக்குள் புகுந்தது

HIGHLIGHTS

குளங்கள் நிரம்பி மறுகால் ஓடுவதால் நகர வீதிகளில் வெள்ளப்பெருக்கு
X

திண்டுக்கல்- நத்தம் சாலையில் உள்ள குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் நகர் பகுதியில் உள்ள வீதிகளில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

திண்டுக்கல்- நத்தம் சாலையில் உள்ள குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் நகர் பகுதியில் உள்ள வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் புத்தாண்டை வரவேற்றது மழை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணத்தினால் திண்டுக்கல் நகர் பகுதியை சுற்றி உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளது.மேலும் நேற்று இரவு அதிக கனமழை பொழிவின் காரணமாக குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறத்தொடங்கின.

மழைநீர் செல்லும் சாலையில் ஓடைகளில் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகம் செய்யப்பட்டிருந்ததன் காரணமாக மழை நீரானது தார் சாலை வழியாக நகருக்குள் புகுந்தது. குறிப்பாக முத்துசாமி குளம், ஆசாரி குளங்கள் நிரம்பி வழியத் தொடங்கியது. இந்த குளங்களில் இருந்து வெளியேறிய நீர், வேடப்பட்டி மயான சாலை வழியாக ஒத்த கண் பாலம் முழுவதும் மழை நீர் சூழ்ந்தது.

இந்த மழை நீர் செல்லும் ஓடைகளில் தூர்வாரப்படாததால் மழைநீர் பாரதிபுரம் பகுதி முழுவதும் மழை நீர் மற்றும் கழிவு நீர் சூழ்ந்து நான்கு புறமும் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாரிக்கப்பட்டது.மிக தாமதமாக வந்த மாநகராட்சி ஊழியர்கள் மழை நீர் சூழ்ந்த பகுதிக்கு வந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 2 Jan 2022 11:44 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்