/* */

திண்டுக்கல்: மே மின் கட்டணம் மக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் -மின்சார வாரியம்

திண்டுக்கல்லில் மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு.

HIGHLIGHTS

திண்டுக்கல்: மே மின் கட்டணம் மக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் -மின்சார வாரியம்
X

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் நடப்பு மாதத்திற்கான மின் கட்டணத்தை பொது மக்களே கணக்கீடு செய்து கொள்ளும் முறையை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து திண்டுக்கல் மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே தங்கள் வீடுகளில் இருக்கும் மீட்டர் பாக்ஸ் மூலமாக சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என்றும் அதை போட்டோ எடுத்து தங்கள் சுய மதிப்பீட்டை வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மே மாதத்துக்கான மின் கட்டணம் ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்தால் மின்சார வாரிய உதவி பொறியாளரும், உதவி கருவூல அலுவலரும் அதை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள் என்றும் மதிப்பீடு உறுதி செய்யப்பட்டால் இணைய வழியில் மின்கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Updated On: 21 May 2021 9:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.