/* */

திண்டுக்கல்லில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல்லில் மனித நேய மக்கள் அறக்கட்டளை, கூட்டுறவு அச்சக பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
X

திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் அறக்கட்டளை, தமிழ்நாடு கூட்டுறவு அச்சக பணியாளர்கள் முன்னேற்ற சங்கமும் இணைந்து நடததிய கொரோனா விழிப்புணர்வு முகாமில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் அறக்கட்டளை, தமிழ்நாடு கூட்டுறவு அச்சக பணியாளர்கள் முன்னேற்ற சங்கமும் இணைந்து covid-19 விழிப்புணர்வு முகாம் நடத்தியது.

கூட்டுறவு அச்சக வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு அச்சக பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் .கணேசன் தலைமை வகித்தார்..

மனிதநேய மக்கள் அறக்கட்டளையின் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். முன்னதாக, கூட்டுறவு அச்சக பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளர் பாண்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ், ஆக்சிசன் அளவு போன்றவை பரிசோதிக்கப்பட்டது. முன்னதாக, கிருமி நாசினி மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.

சமூக ஆர்வலர்,கணேசன் பேசும்போது,கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக ஈடுபட்டுவருகிறது.பல்வேறு தங்களை அறிவித்து ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களை காத்து வருகிறது. நோய்த்தடுப்பு பணிகளில் அரசோடு இணைந்து பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா எனும் நோய்த்தொற்றை முற்றிலும் ஒழிக்க முடியும்.

எனவே சோப்பை கொண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள், இடைவெளியை கடைபிடியுங்கள்,கிருமி நாசினியை பயன்படுத்துங்கள், ஆவி பிடியுங்கள் என்று நோய் பற்றியும்,நோய்த்தடுப்பு வழிமுறைகளையும் எடுத்துக் கூறினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முகாமின் நிறைவில், கூட்டுறவு அச்சகம் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் பாண்டித்துரை நன்றி கூறினார்.

இதில் மனித நேய மக்கள் அறக்கட்டளையின் செயலாளர் விஜயகுமார்,நிர்வாகிகள் சாந்தி,தன்னார்வலர் சின்ன காளை மற்றும் அச்சக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 May 2021 10:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்