/* */

தருமபுரி: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் பூங்கா அமைப்பு

தருமபுரியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோர பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தருமபுரி: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் பூங்கா அமைப்பு
X

அதியமான்கோட்டையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது.

தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், சுற்றுப்புற சூழல் மற்றும் வடகிழக்கு பருவமழை கருத்தில் கொண்டு, சாலையோர பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, பழைய தேசிய நெடுஞ்சாலை அதியமான்கோட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே, சாலையோர பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கோட்டப் பொறியாளர் தனசேகரன், முதலாவது மரக்கன்றினை நட்டு வைத்தார். தொடர்ந்து உதவி கோட்டப் பொறியாளர் ஜெய்சங்கர், உதவிப் பொறியாளர் கிருபாகரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இப்பணிகளை சாலை ஆய்வாளர்கள் அபிமன்னன், ரகமத்துல்லா, சரவணன் ஆகியோர் மேற்பார்வையில், சாலைப் பணியாளர்கள் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட செடிகளை நட்டனர். இதே போன்று சாலையோரம் ஆங்காங்கே 1000-க்கும் மேற்பட்ட செடிகள் நட்டு பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  2. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  3. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  6. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  7. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  9. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  10. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?