/* */

பெருங்கற்கால சின்னங்கள் பாதுகாப்பு: தமிழக முதல்வருக்கு தருமபுரி எம்எல்ஏ நன்றி

பெருங்கற்கால ஈம நினைவு சின்னங்களை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்க வேண்டுமென முதலமைச்சருக்கு கடிதமும் அளித்தேன்.

HIGHLIGHTS

பெருங்கற்கால சின்னங்கள் பாதுகாப்பு: தமிழக முதல்வருக்கு  தருமபுரி எம்எல்ஏ  நன்றி
X

தருமபுரி பாமக  எம் எல் ஏ வெங்கடேஸ்வரன்

தருமபுரி அருகே பெருங்கற்கால சின்னங்களை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவித்த தமிழக முதல்வருக்கு பாமக எம் எல் ஏ வெங்கடேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி வட்டம், பங்குநத்தம் வருவாய் கிராமத்தில் புல எண் 61 அரசு கரடு புறம்போக்கு பரப்பு 18.67.0 ஹெக்டர் மற்றும் புல எண் 62 அரசு கரடு புறம்போக்கு பரப்பு 7.78.5 ஹெக்டர் ஆகிய அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் முறையே இராஜாகொல்லஅள்ளி மலை மற்றும் திப்பட்டி மலை ஆகியவை சேர்ந்து ஏகல்கெட்டு என்கிற பெயரில் வருவாய் ஆவணங்களில் இடம்பெற்று சுமார் 65 ஏக்கர் 34 சென்ட் உள்ளது.

இந்நிலங்களில் சுமார் 3000 ஆண்டுக்கு முற்பட்டதும், கி.பி.6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதுமான சுமார் 400க்கும் மேற்பட்ட கல் திட்டைகள் மற்றும் மக்கள் வாழ்ந்த மேடான பகுதிகள் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களாக காணப்படுகின்றன. பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் இருப்பதை அறியாமல் சில சமூக விரோதிகள் அச்சின்னங்களை சிதிலமடைய செய்து வருவதாக தெரியப்படுத்தியதை அறிந்து நான் 05.07.2021 அன்று அப்பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, பெருங்கற்கால ஈம நினைவு சின்னங்களை சுற்றிலும் வேலி அமைத்திடவும், சின்னங்கள் சிதிலமடையாமல் பாதுகாக்கவும், சமூக காடுகள் வளர்த்திடவும் சிறப்பு நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதமும் அளித்தேன்.

இந்த கோரிக்கையை ஏற்று, தருமபுரி அருகேயுள்ள பெருங்கற்கால ஈம நினைவு சின்னம் அமைந்துள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக 25.09.2021 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எனது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சருக்கு தொகுதி பொதுமக்கள் சார்பிலும், என் சார்பிலும் நன்றி பாராட்டுவதாக அதில் தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’