/* */

தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடகாவுக்கு பாமக கண்டனம்: ஜி.கே.மணி

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய கர்நாடக அரசுக்கு பாமக கடும் கண்டனம் தெரிவிப்பதாக, பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடகாவுக்கு பாமக கண்டனம்: ஜி.கே.மணி
X

தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக தலைவர் ஜி.கே.மணி

இது தொடர்பாக, பாமக மாநில தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமாக ஜி.கே.மணி, தருமபுரியில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசுக்கு, பாமக கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது. தமிழகத்தின் நீர் ஆதாரத்தை கர்நாடக அரசு தட்டிப்பறிக்கிறது. மேகதாது அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு தென்னிந்திய பசுமை தீர்பாயத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில், 22 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும், 12 மாவட்டங்களில் பாசன ஆதாரமாக விழங்கும் காவிரியில் அணை கட்டும் திட்டத்தை தடுக்க, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் நீராதாரத்தை பெருக்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் அவசியம். தமிழகத்தில் அனைத்து ஆறுகளின் குறுக்கே 5 கி.மீ க்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும். தமிழக அரசு நீர் ஆதாரங்களை விட்டு கொடுக்க கூடாது. காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிடக்கூடாது. +2 பொதுத்தேர்வே போதுமானது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி சான்று உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 July 2021 10:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்