/* */

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
X

தர்மபுரி யில் நடைபெற்ற மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சிறப்புரை ஆற்றினார்.

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், கிழக்கு மாவட்ட பொருப்பாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது.

நகர பொருப்பாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வருகிற 15 ந் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, அதை முன்னிட்டு அனைத்து ஒன்றியங்களிலும் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன், வருகிற 20 ந் தேதி, மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள கண்டன ஆர்பாட்டத்தில் ஒவ்வொரு தொண்டர்களும் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இக்கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமரைசெல்வன், எம்.ஜி.சேகர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் தங்கமணி, நாட்டன் மாது மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Sep 2021 12:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  3. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  4. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  5. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  8. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  9. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  10. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!