/* */

ராணுவ கல்லூரியில் சேர தர்மபுரி மாவட்ட சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

டேராடூனில் ராணுவ கல்லூரியில் சேர தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.

HIGHLIGHTS

ராணுவ கல்லூரியில் சேர தர்மபுரி மாவட்ட சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்
X

கலெக்டர் திவ்யதர்ஷினி.

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2022 பருவத்தில் சேருவதற்கான 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம்தேதி தேர்வு நடைபெறும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளதாவது:

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2022, பருவத்தில் சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. சென்னை நகரிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும்.

நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

இத்தேர்விற்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை "கமாண்டன்ட், இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகாண்ட் டேராடுன் உத்ரகாண்ட், அஞ்சல் குறியீட்டு எண் 248 003" என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, " கமாண்டன்ட், இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி,டேராடுன்" கேட்பு காசோலைக்குரிய கிளை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி, டெல் பவன் டேராடுன் (வங்கி குறியீடு - 01576 உத்தரகண்ட் செலுத்தத்தக்க பொதுப் பிரிவினர் ரூபாய் 600/-க்கான மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூபாய் 555/-க்கான கேட்புக் காசோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையவழி (website - www.rimc.gov.in) மூலமாக பொதுப் பிரிவினர் ரூபாய் 600/- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூபாய் 555/- யையும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்தது, விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் விண்ணப்படி வங்கள் மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும் மற்றும் தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட ஒளிநகல் எடுக்கப்பட்ட இராஷ்ட்சிய இந்திய இராணுவக் கல்லூரி ஹாலோகிராம் (Hologram) முத்திரையிடப்படாத விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01-07-2022 அன்று 11 ½ வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருந்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02-07-2009 - க்கு முன்னதாகவும் 01-01-2011-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்த்தலும் கிடையாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட இராணுவக்கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது அதாவது 01-07-2022 -ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் (Recognised School) ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியார் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு 30.10.2021 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லுரியின் இணையதளத்தை அதாவது www.rimc.gov.in ல் பார்க்கவும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Sep 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது