/* */

கடலூர் அருகே குளம் தூர்வாரும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கடலூர் கரையறவிட்ட குப்பத்தில் உள்ள கோவில் குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஐயப்பன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

கடலூர் அருகே குளம் தூர்வாரும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
X

கரையறிவிட்ட குப்பத்தில் கோவில் குளம் தூர்வாரும் பணி துவங்கியது 

கடலூர் அருகே கரையேறவிட்ட குப்பம் பகுதியில் உள்ள அப்பர் கோயில் அப்பர் குளம் தூர்வரப்படாமல் இருந்தது. குளத்தை சீரமைக்க இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

கிராம மக்கள், கோவில் உபயதாரர்கள் ஒன்றிணைத்து 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளத்தை தூர்வாருதல், குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் குளம் தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தார். இதற்காக நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் எம்எல்ஏ, கோவில் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கோவில் பணிக்காக ஒப்பந்ததாரர் நித்தியானந்தம் ஆறு லட்ச ரூபாய் செலவாகக்கூடிய பணிய 3 லட்ச ரூபாய்க்கு செய்து தருவதாக தெரிவித்து பணிகளை தொடங்கியுள்ளார்.

Updated On: 6 Sep 2021 5:58 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  2. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  3. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  5. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  6. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  7. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  8. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...