/* */

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

HIGHLIGHTS

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பைல் படம்)

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

தற்போது போட்டி தேர்வுகளுக்கு தயாராகிவரும் கடலூர் மாவட்ட வேலை தேடுபவர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி வகுப்புகளாக 01.09.2021 புதன்கிழமை முதல் வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடத்தப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இவ்வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து, வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவைத்துள்ளார்.

Updated On: 6 Sep 2021 2:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!