/* */

பொத்தேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

பொத்தேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த உயர்ரக கார் தீடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது

HIGHLIGHTS

பொத்தேரி  அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து  எரிந்த கார்
X

 செங்கல்பட்டு அருகே தீக்கிரையான விலை உயர்ந்த கார்

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

சென்னை, இராயப்பேட்டை பகுதியை சார்ந்த திருஞானம் என்பவர் சென்னையில் இருந்து சிங்கபெருமாள்கோவில் கோவிலுக்கு பணியின் காரணமாக தனது BMW காரில் வந்துள்ளார். பொத்தேரி எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் அருகே வந்து கொண்டிருந்த போது, காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்ததைத்தொடர்ந்து, காரை ஓரம் கட்டி இறங்கியுள்ளார். காரை விட்டு திருஞானம் இறங்கிய அடுத்த நொடியில் காரின் முன் பகுதியில் மளமளவென தீப்பற்றி எரிந்துள்ளது.

உடனடியாக காரின் உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இச்சம்பவத்தில் காரின் உரிமையாளர் நொடி பொழுதில் உயிர் தப்பிய நிலையில், கார் முழுமையாக தீக்கிரையானது.இச்சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 Feb 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  4. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  5. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  6. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  7. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  8. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  9. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  10. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...