/* */

கூடுவாஞ்சேரி அருகே கோவில் நிர்வாகி மீது தாக்குதல்: திமுக பிரமுகர் கைது!

கூடுவாஞ்சேரி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததை தட்டிக்கேட்ட கோவில் நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கூடுவாஞ்சேரி அருகே கோவில் நிர்வாகி மீது தாக்குதல்: திமுக பிரமுகர் கைது!
X

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது இக்கோவிலை கண்ணன் என்பவர் நிர்வாகம் செய்து வந்துள்ளார். இந்தக் கோவில் அருகே உள்ள நிலத்தில் திமுக பிரமுகரான சுந்தர் என்பவர் நீண்ட வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கோவில் நிலத்தை சுந்தர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் அமைத்ததாகவும், இதனால் கோவில் நிர்வாகி சுந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர் சுந்தர், தனது நண்பர்கள் 3 பேரை வரவழைத்து கோவில் நிர்வாகியை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் படுகாயமடைந்த கோவில் நிர்வாகி கண்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இதுபற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி காவல் துறையினர், திமுக உறுப்பினர் சுந்தரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திமுக உறுப்பினர் சுந்தர் மீது கொலை மற்றும் கொள்ளை என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Updated On: 12 Jun 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  2. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  4. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  5. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  6. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  7. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  8. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  10. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு