/* */

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை, ஆதார் அட்டைகளுடன் பொதுமக்கள் போராட்டம்

செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, ஆதார் அட்டைகளுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை, ஆதார் அட்டைகளுடன் பொதுமக்கள் போராட்டம்
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி செலுத்த முடியாமல் போனது. இதனைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால், பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இன்று செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மறைமலைநகர், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

அங்கு போதுமான தடுப்பூசி இல்லாத நிலையில், மற்றொரு நாள் பொதுமக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும்படி மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தடுப்பூசி போட வந்தவர்கள் கல்லூரி வாயில் முன்பு நின்று, தாங்கள் உடன் கொண்டு வந்திருந்த ஆதார் அட்டைகளுடன், தடுப்பூசி பற்றாக்குறையாக இருப்பதை சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த நகர போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

எனவே, பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த வேண்டும். கொரோனாவின் மூன்றாவது அலை தாக்க வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்,' என்றனர்.

Updated On: 6 July 2021 8:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க