/* */

கொரோனா நிவாரண நிதி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கொரோனா நிவாரண நிதி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்
X

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை திட்டத்தை செங்கல்பட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

கொரோனா நிவாரண தொகையாக ரூபாய் 4 ஆயிரம் திமுக ஆட்சி அமைந்தவுடன் வழங்கப்படும் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான தேர்தல் சமயத்தில் அறிவித்திருந்தனர்.

முதற்கட்டமாக தமிழக முழுவதும் ரூ.2 ஆயிரம் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் என அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை அன்மையில் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். நியாய விலை கடை ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக இதற்கான டோக்கன் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இன்று காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் வழங்க உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பயனாளிகளுக்கு மணிகூண்டு அருகே உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ரூ.2 ஆயிரம் வழங்கி துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், கூட்டுறவு துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 May 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...