/* */

அரியலூர்: தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்த கலந்தாய்வு கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

அரியலூர்: தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்த கலந்தாய்வு கூட்டம்
X

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தூய்மை பாரத இயக்க கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.


அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) - சுகாதார ஊக்குநர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்கள், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தூய்மை பாரத இயக்க சுகாதார ஊக்குநர்கள் ஆகியோர்களுக்கு, கிராம ஊராட்சிகளை தூய்மையாக பராமரித்தல் மற்றும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தொடர்ந்து தக்க வைப்பது குறித்து, பணியாளர்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புகள் குறித்து மாவட்ட கலெக்டரால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசால் ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான வீடு கட்டுதல், தெருவிளக்கு பராமரித்தல், குடிநீர் விநியோகம், சுகாதாரம், வடிகால் வசதி, சாலை வசதி மற்றும் இதர பிற நலத்திட்டங்கள் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்த, பணியாளர்கள் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி திட்ட செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Oct 2021 7:09 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்