/* */

அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்க கண்காணிப்பாளர் முயற்சி

அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்க கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முயற்சித்து வருகிறார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்க கண்காணிப்பாளர் முயற்சி
X

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சிமெண்ட் ஆலை கனரக வாகனங்கள் மற்றும் மற்ற கனரக வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே நகர்ப்புற மற்றும் ஊரக சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படுகின்றன. சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத, வாகனங்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த 2022 ஆம் ஆண்டில் இதுவரை(ஜனவரி முதல் ஏப்ரல்) வரை மொத்தம் 210 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. விபத்து ஏற்படுத்தியவர் மீதும், வாகனத்தின் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

பெரும்பாலான விபத்துகள் அதிவேகம், அஜாக்கிரதை மற்றும் மது போதையில் பயணம் செய்வதால் நடைபெறுள்ளன. நமது மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்துகள் தான் அதிகமாக நடைபெற்றுள்ளது. இரண்டு சக்கர வாகன விபத்தில் தான் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

சிமெண்ட் ஆலை கனரக வாகனங்களால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்ற பதிவுகள் சமூகவலைதளத்தில் பதிவிடப்படுகின்றன. இது உண்மைக்கு புறம்பான செய்தியாகும். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரியலூர் மாவட்ட காவல்துறை அரியலூர் மாவட்டத்தை "விபத்தில்லா மாவட்டமாக" மாற்றும் கனவை இலக்காகக் கொண்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அது அரியலூர் மண்ணின் மைந்தர்களாகிய உங்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டும் தான் சாத்தியப்படும். காவல்துறை சார்பில் பல்வேறு போக்குவரத்து விழிப்புணர்வுகள் தொடர்ச்சியாக மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன/

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 10 May 2022 1:47 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  2. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  3. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  4. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  7. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  9. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  10. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!