/* */

அரியலூர் மாவட்டத்தில் நவ.26ல் பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் 26.11.2021 (வெள்ளிக்கிழமை) முகாம் நடக்கவுள்ள கிராமங்களின் விவரம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நவ.26ல் பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம் மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமங்களில் 26.11.2021 (வெள்ளிக்கிழமை) அன்று நடக்கவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும்.

வட்டம் வாரியாக 26.11.2021 (வெள்ளிக்கிழமை) முகாம் நடக்கவுள்ள கிராமங்களின் விவரம்:

அரியலூர் வட்டத்தில் இடையத்தாங்குடி மற்றும் கருப்பிளாக்கட்டளை ஆகிய கிராமங்களுக்கு இடையாத்தாங்குடி கிராம சேவை மைய கட்டிடத்திலும், வெங்கனூர் மற்றும் சன்னாவூர் (தெ) ஆகிய கிராமங்களுக்கு சன்னாவூர் (தெ) கிராம சேவை மைய கட்டிடத்திலும், செந்துறை வட்டத்தில் துளார் மற்றும் அசாவீரன்குடிகாடு ஆகிய கிராமங்களுக்கு அசாவீரன்குடிகாடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் நடுவலூர் (மே) மற்றும் நடுவலூர் (கி) ஆகிய கிராமங்களுக்கு நடுவலூர் (மே) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், பிச்சனூர் மற்றும் வெத்தியார்வெட்டு ஆகிய கிராமங்களுக்கு பிச்சனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் குவாகம் மற்றும் கொடுக்கூர் ஆகிய கிராமங்களுக்கு குவாகம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் முகாம் நடக்கவுள்ளது.

மேற்படி இந்த சிறப்பு முகாமில் சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயன் அடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!