/* */

சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த அம்பேத்கர் சிலை மாற்றம்

திருமானூரில் சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த அம்பேத்கர் சிலை வேறு இடத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.

HIGHLIGHTS

சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த அம்பேத்கர் சிலை மாற்றம்
X

அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் கடந்த 1993 ம் வருடம் ஜூன் மாதம், பாமக சார்பில் அம்பேத்கர் முழு உருவ சிலையை பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் திறந்து வைத்தார். இந்நிலையில், தற்போது, பெரம்பலூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை, திருமானூரில், பெட்ரோல் பங்க் முதல் பயணியர் மாளிகை வரை, விபத்து பகுதியாக சாலை விரிவாக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சாலை விரிவாக்கத்தில் அம்பேத்கர் சிலை நடுவில் இருந்தது.

இந்நிலையில், அம்பேத்கர் சிலை, தேசிய நெடுஞ்சாலை, உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர் விஜயலெட்சுமி, பாமக மாவட்ட தலைவர் ரவிசங்கர், பாமக தொகுதி செயலாளர் தர்ம்பிரகாஷ் மற்றும் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், அம்பேத்கர் சிலை, அந்த இடத்திலிருந்து பொக்லின் எந்திரம் மூலம், தூக்கி வேறு இடத்தில் வைக்கப்பட்டது.

மேலும், இந்த அம்பேத்கர் சிலையானது, ஏற்கனவே, சிலை இருந்த இடத்திற்கு பின்னால், வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், அம்பேத்கர் சிலை எடுக்கப்பட்ட இடத்தில், சாலை விரிவாக்கத்திற்கான பணிகளும் தொடங்கியது.

Updated On: 25 Jan 2022 7:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!