/* */

அரியலூரில் அரோகரா கோஷத்துடன் வள்ளி தெய்வானையை மணமுடித்த முருகப்பெருமான்

அரியலூர் ஸ்ரீபாலசுப்ரமணியசுவாமி கோவிலில் நடைபெற்ற முருகப்பெருமான் திருக்கல்யாணத்தை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.

HIGHLIGHTS

ஜப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று சூரப்பத்மனை, முருகப்பெருமான் ஆட்கொண்ட நிகழ்ச்சி சூரசம்ஹாரமாக முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. நேற்று அரியலூர் நகரில் உள்ள ஸ்ரீபாலசுப்ரமணியசுவாமி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் கஜமுகசூரன், ஆடுதலைசூரன்,சிங்கமுகசூரன், தரகாசூரன், பத்மசூரன், மயூராசூரன், சூரபத்மன் என ஏழுஉருவங்களை தாங்கி வந்த சூரனை ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்த முருகப்பெருமான் வேல்கொண்டு அழித்து ஆட்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இன்று முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு காப்பு கட்டப்பட்டது. இதனையடுத்து மணமக்களுக்கு திருமணத்திற்கு யாகம் வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் ஓதப்பட்டது.

பின்னர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் மாலை மாற்றிய பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது.

திரளான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.

Updated On: 11 Nov 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க