/* */

பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவம் கொடியேற்றம்

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

HIGHLIGHTS

பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவம் கொடியேற்றம்
X

உலகப் புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாசிமக பிரம்மோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில், உலகப் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு, மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீ பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ பிரகத்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. காலை துவங்கிய இவ்விழா, சுவாமி அம்பாள் அலங்காரத்தில் பிரகாரத்தை சுற்றி வந்த நிலையில் கொடிமரம் முன்பு கொடியேற்றப்பட்டு, கொடி மரத்திற்கும் சுவாமி, அம்பாளுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் அறநிலையத் துறை அதிகாரிகளும், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் குடும்பத்தினரும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசித்தனர். கர்ப்ப கிரகத்தில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. வரும் 17-ஆம் தேதி சுவாமி வீதிஉலா, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பக்தர்கள் உபயத்தில், தீர்த்தவாரி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 Feb 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  4. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  5. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  7. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  8. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  9. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்