/* */

மாற்றுத்திறனாளியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

மாற்றுத்திறனாளியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
X

பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி ராஜ்மோகன்.


அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் சின்னகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த கீழத்தெருவில் வசிக்கும் கணேசன் மகள் ஜெயமாலினி. வயது 36. பார்வையற்ற மாற்றுத்திறனாளி. கடந்த 02.04.2021 அன்று மாலை 5.30 மணியளவில், தன் வீட்டில் ஜெயமாலினி தனியே இருந்த போது, சின்னகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த கீழத்தெருவில் வசிக்கும் ராமலிங்கம் மகன் ராஜ்மோகன், (வயது 30 ) அங்கு வந்துள்ளார்.

ஜெயமாலினியின் அண்ணன் ஜெயபாலை பற்றி விசாரிப்பது போல் வீட்டுக்குள் வந்த ராஜ்மோகன், பேச்சுக்கொடுத்துக்கொண்டே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் கதவை சாத்திவிட்டு, ஜெயமாலினியை பிடித்து இழுத்துள்ளார். ஜெயமாலினி கூச்சலிட்டதால் ராஜ்மோகன், ஜெயமாலினியின் வாயில் துணியை திணித்து, அவர் அணிந்திருந்த நைட்டியை கிழித்து கழுத்தில் ஓங்கி அடித்துள்ளார். பலத்த அடிபட்ட நிலையில், சுயநினைவை இழந்த ஜெயமாலினி மயங்கி, கீழே விழுந்துள்ளார்.

தரையில் விழுந்த அவரை பலவந்தப்படுத்தி, ராஜ்மோகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது ஜெயமாலினியின் அண்ணன் மகள் சீதளதேவி அங்கு வந்து கதவை திறந்ததால் ராஜ்மோகன், 'இதை யாரிடமாவது வெளியில் சொன்னால், கொன்று விடுவேன்,' என ஜெயமாலினி மற்றும் சீதளதேவி ஆகியோரை மிரட்டிவிட்டு, வீட்டின் பின்வாசல் வழியாக தப்பியோடியுள்ளார். பாலியல் துன்புறுத்தலால் ஜெயமாலினியின் முழங்கைகள், கால்கள், தொடை பகுதிகள் உட்பட உடலில் பல பகுதிகளில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜெயமாலினி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், ராஜ்மோகன்மீது வழக்குப்பதிவு செய்தனர். ராஜ்மோகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை, அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜெயமாலினி மற்றும் அவரது அண்ணன் மகள் சீதளதேவி ஆகியோர் சட்சியம் அளித்தனர். பார்வையற்ற பெண்ணை, வீட்டில் தனியாக இருந்த அவரை, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை தாக்கி, பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது, விசாரணையில் உறுதியானது. மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக ராஜ் மோகன், ஜெயமாலினி, சீதளதேவி ஆகியோருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததும் தெரிய வந்தது.

விசாரணைகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு வழங்கினார். அதில் ராஜ்மோகனின் குற்றம் நிருபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனையும் 50ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை காலத்தை, ஏககாலத்தில் அனுபவிக்கவும், அபராத தொகையை கட்டாவிட்டால் மேலும் 5 ஆண்டுகள், 2மாதம் சிறைத்தண்டனையும் விதித்து தனது தீர்ப்பில், நீதிபதி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் குற்றவாளி ராஜ்மோகனை போலீசார் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். இவ்வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக ராஜா ஆஜரானார்.

Updated On: 13 Oct 2022 11:32 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  9. கரூர்
    கரூர் மாவட்டத்தில் மே 29ம் தேதி உள்ளூர் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு
  10. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு