/* */

கப்பலோட்டிய தமிழர் வாழ்க்கை கண்காட்சி: கலெக்டர் துவக்கி வைத்தார்

கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

கப்பலோட்டிய தமிழர் வாழ்க்கை கண்காட்சி: கலெக்டர் துவக்கி வைத்தார்
X

அரியலூர் மாவட்டத்தில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்து, அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்த நகரும் புகைப்படக் கண்காட்சியில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் உள்ள வாழ்க்கை குறிப்புகள், வரலாறுகள், சுதந்திரப் போராட்ட தியாகங்கள், நிகழ்வுகளின் செக்கிழுத்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த நகரும் புகைப்படக் கண்காட்சி அரியலூர் மாவட்டத்தில் இன்று (08.04.2022) மற்றும் நாளை (09.04.2022) ஆகிய இரண்டு நாட்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இன்று நடைபெறும் நகரும் புகைப்படக் கண்காட்சியினை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர் அரசு உயர்நிலைப்பள்ளி (பெ), அரியலூர் சி.எஸ்.ஐ பள்ளி, அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் நிர்மலா மெட்ரிக் பள்ளி, அரியலூர் தூயமேரி உயர்நிலைப்பள்ளி, வாரணவாசி அரசு உயர்நிலைப்பள்ளி, கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிடவுள்ளனர்.

மேலும், நாளைய தினம் (09.04.2022) நடைபெறும் நகரும் புகைப்படக் கண்காட்சியினை தாமரைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, பொய்யாதநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, இராயம்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி, செந்துறை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி, மருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிடவுள்ளனர்.

எனவே, அரியலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நகரும் புகைப்படக் கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, வ.உ.சிதம்பரனார் அவர்களின் வீர வரலாற்றையும், தியாகங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

தொடர்ந்து, சுதந்திரப் போராட்டத்தில் அன்னாரின் தியாங்களை அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.இராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 April 2022 8:18 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  3. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  8. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  9. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  10. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!