திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
திருப்பரங்குன்றம், முருகன் கோயில், நிரம்பி வழிந்த கல்யாணக் கூட்டம்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நிரம்பி வழியும் திருமண கூட்டம்:
மதுரை:
வைகாசி மாத முதல் மூகூர்த்த தினத்தில் இன்று கோயிலில் 95 திருமணங்கள் நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் வைகாசி மாதத்தை முன்னிட்டு, மூர்த்த தினமான முதல் மூர்த்த தினத்தில் இன்று சதத்தை தொட்ட (95) திருமணங்கள் நடைபெற்றது.
சித்திரை மாதம் அதிக முகூர்த்தம் இருக்காது. அக்கினி நட்சத்திரம் மற்றும் குறைவான முகூர்த்தம் காணமாக திருமணத்திற்காக பேசி முடித்து வைகாசி மாதத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்வார்கள்.
இந்த நிலையில், அக்கினி நட்சதிரம் நேற்று முன்தினம் முடிந்து வைகாசி மாதத்தின் முதல் முகூர்த்தமான இன்று, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருவிழா போல் திருமண கூட்டம் நிரம்பி வழிந்தது.
திருப்பரங்குன்றம் கோவிலில், திருமணத்திற்காக பதிவு பெற்ற திருமணங்கள் எண்ணிக்கை மட்டுமே 95 மேலும், சுற்றுப்புறங்களில் உள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடைபெறுகிறது என்பது, குறிப்பிடத்தக்கது.
இன்று காலையில் 95 திருமணங்களுக்கு கோவிலில் மட்டும் பதிவு செய்து நடத்தி உள்ளனர். சுற்றி உள்ள மண்டபங்களில் அதிக திருமணம் நடக்கிறது.
இதனால், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் , திருமணக் கூட்டம் நிரம்பி வழிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu