வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!

வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு   கராத்தே பயிற்சி!
X

வாடிப்பட்டியில் ,மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா.

வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது.

வாடிப்பட்டியில் 26-வது ஆண்டு கராத்தே கருப்புபட்டை மற்றும் வண்ண நிற பேல்ட்கள் தேர்வு நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மீனாட்சி நகரில் ஸ்ரீ கணேசா கராத் தே புடோகான் பயிற்சி பள்ளி சார்பாக 26-வது ஆண்டு கராத்தே கருப்புபட்டை மற்றும் வண்ண நிற பேல்ட்கள் தேர்வும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு, கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பொன். பனகல் பொன்னையா தலைமை தாங்கி, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். வர்த்தக சங்க செயலாளர் மனோராஜா, இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி பள்ளி நிர்வாகி சென்சாய் கணேசன் வரவேற்றார்.

இதில், கராத்தே, கருப்புபட்டை மற்றும் வண்ண நிற பட்டைகள் தேர்வும் நடந்தது. இந்த போட்டியின் நடுவர்களாக பயிற்சியாளர்கள் செல்வகணேஷ், சந்துரு, ஷாலினி, தன்யா, டானியல் ராஜ், மேரனிஷ், சந்தோசினி ஸ்ரீ ஆகியோர் இருந்தனர்.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசும் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில், பயிற்சியாளர் சென்சாய் செல்வ கணேஷ் நன்றி கூறினார்.

இந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கருப்புபட்டை மற்றும் வண்ண நிற பட்டை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசு வழங்கப்பட்டது.

இந்த போட்டியின் மூலம் மாணவ-மாணவிகளின் கராத்தே திறன் மேம்படுவதோடு, அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம் போன்ற குணங்கள் வளர்க்கப்படுகின்றன

Tags

Next Story
Weight Loss Tips In Tamil