/* */

மாளிகைமேடு 2ம் கட்ட அகாழாய்வில் பழங்கால சுற்று சுவர்கள் கண்டெடுப்பு

மாளிகைமேட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2ம்கட்ட அகழாய்வில் தற்போது தோண்டத் தோண்ட பழங்கால சுற்று சுவர்கள் கண்டெடுப்பு.

HIGHLIGHTS

மாளிகைமேடு 2ம் கட்ட அகாழாய்வில் பழங்கால சுற்று சுவர்கள் கண்டெடுப்பு
X

கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளில் தற்போது தோண்டத் தோண்ட கட்டிடச் சுவர்கள் தென்படுகின்றன.


அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளில் தற்போது தோண்டத் தோண்ட கட்டிடச் சுவர்கள் தென்படுகின்றன.

தமிழக அரசு முதல்கட்டமாக 2020-21 ஆண்டில் தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் போன்று 7 மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரேடார் கருவி மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடாக மண்டி கிடக்கும் புல் புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, கல்குளம், ஆயுதக்களம், மண்மலை,மாளிகைமேடு உள்ளிட்ட 6 இடங்களில் ஆய்வு செய்வதற்காக சுற்றியுள்ள 18 கிலோ மீட்டர் சுற்றளவில் சென்று தொழில்நுட்ப கருவிகள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிப்ரவரி 21ஆம் தேதியிலிருந்து ரேடார் கருவி மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டது. பத்துக்கு பத்து என்ற அளவில் குழிகள் தோண்டப்பட்டு அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகாழாய்வில், இரண்டடுக்கு சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அகாழாய்வில் பானை, ஓட்டு வில்லைகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள் மேலும் செப்புக்காசு போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் புராதன பொருட்கள் கிடைக்கின்றனவா என தீவிர ஆராய்ச்சியில் அலுவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 2022 ஆண்டில் பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்கப்பட்டது. கடந்த 2021 ஆண்டில் 17 குழிகளும் 2022 ஆண்டில் இரண்டாம் கட்டமாக 14குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது நடைபெற்ற ஆராய்ச்சிப் பணிகளில் தோண்டத் தோண்ட 9 அடி ஆழத்தில் 25 செமீ நீளமும் 13 சென்டிமீட்டர் அகலமும் 4.5 சென்டி மீட்டர் உயரமும் கொண்ட செங்கல்லால் ஆன பழங்கால சுற்று சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுவரானது மேல்புறம் 34 வரிசைகளும் வடபுறம் 32 வரிசைகளில் தென்புறம் 14 வரிசைகளும் கொண்ட செங்கல் சுவராக உள்ளது. ஆராய்ச்சிப் பணியில் சிறிய ஆணிகள், கிளிஞ்சல்கள், கண்ணாடி மணி, உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றன. மேலும் இப்பணிகளில் 40 தொழிலாளர்கள், அலுவலர்கள், பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். மேலும் அறிய வகை பொக்கிஷமாக பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

Updated On: 4 Jun 2022 8:18 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...