/* */

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பித்துக் கொள்ள சலுகை: அரியலூர் கலெக்டர் தகவல்

அரியலூரில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பித்துக் கொள்ள சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பித்துக் கொள்ள சலுகை: அரியலூர் கலெக்டர் தகவல்
X
அரியலூர் கலெக்டர் ரத்னா, (பைல் படம்)

அரியலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பித்தல் தொடர்பாக கலெக்டர் ரத்னா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.

2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையை பெறவிரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.05.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 27.08.2021-க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி 27.08.2021 வரை பதிவுதாரர்கள் தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் த.ரத்னாதெரிவித்துள்ளார்.

Updated On: 2 Jun 2021 8:53 AM GMT

Related News