/* */

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதிகளில் சேர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மாணவ, மாணவியர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் சேர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதிகளில் சேர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
X

கலெக்டர் ரமண சரஸ்வதி 

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்:

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் 01 கல்லூரி மாணவர் விடுதியும், 01 ஐடிஐ மாணவர் விடுதியும், 13 பள்ளி மாணவர் விடுதிகளும், 07 பள்ளி மாணவியர் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் மேற்படி விடுதிகளில் சேர்ந்து பயனடையலாம். விடுதியில் சேர மாணவ, மாணவியர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். விடுதியிலிருந்து மாணவர் குடியிருப்பு 5 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவியருக்கு இது பொருந்தாது.

மாணவ, மாணவியர்களுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று வேலைகளிலும் வழங்கப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டிற்கு விடுதியில் சேர்வதற்கான விண்ணப்பப படிவங்கள் விடுதி காப்பாளர், காப்பாளனியிடம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் ஆதார் அட்டை நகல் மற்றும் மாணவ, மாணவியர்களின் பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினையும் இணைந்து அந்தந்த காப்பாளர், காப்பாளினி வசம் பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளுக்கு 14.12.2021-க்குள் ஒப்படைத்து மாணவ, மாணவியர்கள் பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க