/* */

அரியலூரில் விநாயகரிடம் விநோத மனு

அரியலூரில் விநாயகரிடம் விநோத மனு
X

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் கோவிலை காப்பாற்ற அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கனவில் விநாயகரே வந்து அறிவுரை கூறவேண்டும் என்று இந்து முன்னனியினர் விநாயகருக்கு மனுஅளித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தா.பழூர் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இவ்வலுவலகங்களுக்கிடையில் வரசித்தி விநாயகர் ஆலயம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரக்கூடிய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் விநாயகரை வழிபட்டுச் செல்வார்கள். மேலும் அருகில் உள்ள அரசுமருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இக்கோவிலுக்கு வந்து வேண்டுதல் நடத்துவதும், குணமடைந்து வீடு திரும்பும் போது நன்றி சொல்வதும் வழக்கமாக உள்ளது. அவ்வழியே செல்லக்கூடிய பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்குசெல்லும் போதும் பள்ளி முடிந்து வரும் போதும் வரசித்தி விநாயகரை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் இக்கோவில் அருகில் ஆவின் பாலகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது அமைக்கப்பட்டால் சுற்றி சுகாதார சீர்கேடு ஏற்படும். பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் நோயாளிகளின் உறவினர்கள் இக்கோயிலுக்கு வருவதற்கு தயங்குவார்கள். எனவே ஆவின் பாலகம் வருவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆவின் பாலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணியினர் அக்கோவிலுக்கு சென்று ஒரு விநோதமான மனுவை விநாயகரிடம் சமர்ப்பித்தனர். அம்மனுவில் இந்த இடத்தில் ஆவின் பாலகம் கட்ட தடை விதிக்க அதிகாரியிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், விநாயகர் கடவுளான நீங்கள், உங்களது இடத்தை காப்பாற்றிக் கொள்ளவும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கனவில் விநாயகர் தோன்றி அவர்களுக்கு ஆவின் பாலகம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளும் வகையில் மனுவில் எழுதப்பட்டிருந்ததை விநாயகர் முன்பு வாசித்தும் அந்த மனுவை விநாயகர் கோவிலில் வழங்கினர்.இச்சம்பவம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 27 Jan 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்