/* */

சாகாவரம் தரும் சர்க்கரை வள்ளிகிழங்கு சாப்பிடுங்க...!

தமிழக உணவு வகைகளில் சர்க்கரை வள்ளி கிழங்கு சிறப்பான மருத்துவ குணம் கொண்டதாக அறியப்படுகிறது.

HIGHLIGHTS

சாகாவரம் தரும் சர்க்கரை வள்ளிகிழங்கு சாப்பிடுங்க...!
X

சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுங்க...

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட சில காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள் விளைகின்றன. சர்க்கரை வள்ளிக்கிழங்கு தமிழகத்தில் விளையும் அளவுக்கு பிற இடங்களில் விளைவதில்லை. அப்படியே விளைந்தாலும் அதன் அளவு மற்றும் நிறம், சுவையில் சிறிய மாற்றங்கள் உள்ளன. உலக அளவில் விளையும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளில் தமிழகத்தில் விளையும் கிழங்கிற்கு சிறப்பான சுவையும், மருத்துவக் குணமும் உண்டு என சித்தா, ஆயுர்வேத, யுனானி மருத்துவ உலகம் கொண்டாடி வருகின்றன.

விலையும் மிகவும் குறைவாக கிடைக்கும் இந்த கிழங்கு தெருவோரங்களில் விற்கப்பட்டாலும், இது தரும் மருத்துவக் குணங்கள் அபாரமானவை என பாராட்டுகின்றனர். இந்த கிழங்கினை பார்த்தால் உடனே வாங்கிச் சாப்பிடுங்கள். குறிப்பிட்ட சீசனில் மட்டும் இது கிடைக்கும்.

மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes) மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது. நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு. அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் கரிக்கழிவு போன்றது தான் அந்த Free Radicals.

எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes).

அது நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து எடுத்து ஒழிக்கிறது. உடலை சுத்திரிக்கும் குறிப்பாக உணவு, இரைப்பை உள்ளிட்ட உடல் உள் உறுப்புகளை சுத்திகரிக்கும் என சர்க்கரை வள்ளிக்கிழங்கிற்கு தனி குணம் உண்டு.

நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால் சீசனில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கை தேவையான அளவு சாப்பிடுங்கள். வைத்தியனுக்கு தருவதை, வணிகனுக்கு தருவோம்!

Updated On: 12 Jan 2023 4:03 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்