/* */

குடும்பத்தினர் பேராசையால், திருட்டு நகைகளை கமுக்கமாய் 'அமுக்கிய' இன்ஸ்பெக்டர்

சென்னை, அரும்பாக்கம் வங்கி கொள்ளையில், இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் நகைகளை அவரது மனைவி பதுக்கி வைத்தது தெரிய வந்துள்ளது.

HIGHLIGHTS

குடும்பத்தினர் பேராசையால், திருட்டு நகைகளை கமுக்கமாய் அமுக்கிய இன்ஸ்பெக்டர்
X

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அச்சிரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்.

சென்னை, அரும்பாக்கம், ரசாக் கார்டனில், தனியாருக்கு சொந்தமான பெட் வங்கியில், காவலாளி சரவணனுக்கு, மயக்க குளிர்பானம் கொடுத்து, ஊழியர்களை அறைக்குள் பூட்டி, 31. 7 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில், முன்னாள் வங்கி ஊழியர் முருகன் முக்கிய குற்றவாளி. இவர் தலைமையில், இந்த கொள்ளை அரங்கேறியது. முருகன், அவரின் பள்ளி தோழர்கள் சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில் ஆகியோரை கைது செய்தனர்.

சந்தோஷ், சூரியா ஆகியோரை கஸ்டடி எடுத்த போலீசார், அதில் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சந்தோஷிடம் தனியாக தங்கத்தை பிரித்து கொடுத்தது தெரியவந்தது. ஆனால், அந்த நகை கணக்கில் வரவில்லை. பின்னர் தான் அச்சிரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் இருப்பது தெரிந்து, மேல்மருவத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து, 6.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நகைகள், சந்தோஷ்தான் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, அமல்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், இந்த நகைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், சந்தோஷ், வீட்டுக்கு வந்தது மட்டும் தெரியும், ஆனால், இதெல்லாம் எனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று , அரும்பாக்கம் காவல் நிலையத்தில், நேற்று கூடுதல் கமிஷனர் அன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அதில், நகைகளை உருக்க, கொள்ளையர்கள் மிஷின் ஒன்றை வாங்கினர். நகைகளை உருக்க முயற்சித்தபோது, அதிகம் புகை வந்ததால், அதை கைவிட்டு, ஆளாளுக்கு நகையை பிரித்துக்கொண்டனர். கொள்ளைப்போன மொத்த 31.7 கிலோ நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளையில், இன்ஸ்பெக்டர் அமல் ராஜூக்கு நேரடி தொடர்பில்லை என விளக்கம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, திருட்டு நகைகளை பதுக்கிய அமல்ராஜ் , பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அமல்ராஜ் மனைவி இந்திரா, சந்தோஷின் மனைவி ஜெயந்தி ஆகியோர், அவ்வளவு நகைகளை பார்த்ததும் வாய்பிளந்து நின்றனர். இதனால், கொள்ளையடிக்கப்பட்ட நகை என்பதையும் மறந்து, வீட்டில் பதுக்கியதால் வந்த விணையில், அமல்ராஜ் சிக்கி, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

Updated On: 21 Aug 2022 12:27 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!