/* */

அடுத்த இன்னிங்க்ஸ் துவங்கிய நடிகை லைலா

actress laila next movie- சர்தார் படத்தின் மீண்டும் நடிக்க துவங்கியுள்ள நடிகை லைலாவுக்கு, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வருவதால், தமிழ் சினிமாவில் அவரது 2வது இன்னிங்க்ஸ் துவங்கியது.

HIGHLIGHTS

அடுத்த இன்னிங்க்ஸ் துவங்கிய நடிகை லைலா
X

actress laila next movie- நடிகை லைலா.

actress laila movies opportunity, actress laila next movie- தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லைலா. பார்த்தேன் ரசித்தேன், த்ரீ ரோசஸ், பிதாமகன், உன்னை நினைத்து, நந்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். பிதாமகன் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகை லைலா, திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். குடும்பம், குழந்தைகள் என அவர்களை பார்ப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தார். மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு சர்தார் படத்தில் லைலா நடித்திருந்தார். ஒரே நாடு, ஒரு குடிநீர் திட்டம் என்ற பெயரில், தேசத்தை அழிக்கும் ஒரு திட்டத்தை எதிர்த்து போராடும், ஒரு குழந்தையின் தாயாக, தேசப்பற்று மிக்க ஒரு நல்ல கதாபாத்திரம், இந்த படத்தில், லைலாவுக்கு அமைந்தது சிறப்பு.


கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடியது. நடிகை லைலாவுக்கு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் பலரின் பாராட்டை சம்பாதித்த லைலாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தற்போது, வதந்தி என்ற வெப் சீரிஸில் லைலா நடித்துள்ளார். கொலைகாரன் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் திரில்லராக இந்த வெப் சீரிஸை எடுத்துள்ளார். மேலும் வெற்றி இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தங்களது வால்வாட்சர் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளனர்.

இந்த வெப் தொடரில் முதல் முறையாக லைலாவுக்கு ஜோடியாக, எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்களில் மாஸ் வில்லனாக எஸ் ஜே சூர்யா மிரட்டி வருகிறார். இப்போது வெப் சீரிஸிலும் களமிறங்கி, ஒரு கை பார்க்க உள்ளார்.


மேலும் நாசர், சஞ்சனா மற்றும் பலர் இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர். இத்தொடர் மிக விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தொடரிலும் மிக வலுவான கதாபாத்திரம் லைலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆகையால், சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ள லைலா தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி முன்பு இருந்ததைவிட இப்போதுதான் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பில், பல ஆண்டுகளாக சினிமா பக்கம் திரும்பாத லைலா, கார்த்தி நடித்த சர்தார் படத்தின் மூலம் 'ரீ என்ட்ரி' ஆனார். முக்கியத்துவம் நிறைந்த கேரக்டராக, லைலாவுக்கு அமைந்ததால், தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க, வாய்ப்புகள் அவரது வீட்டுக்கதவை தட்ட துவங்கியிருக்கிறது. எனினும், வாய்ப்புக்காக அனைத்து படங்களையும் ஒப்புக்கொள்ளாமல், தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து, அந்த படங்களில் மட்டுமே நடிக்க லைலா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Updated On: 18 Nov 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்