/* */

வாக்கு எண்ணிக்கை 2 நாட்களாக நடைபெறும்: கலெக்டர் தகவல்

வாக்கு எண்ணிக்கை 2 நாட்களாக நடைபெறும்:  கலெக்டர் தகவல்
X

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி,வில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகரில் உள்ள வித்யா பொறியியல் கல்லூரியில் மே 2-ம் தேதி நடைபெறவுள்ளது.

கொரோனோ தொற்றுப் பரவல் காரணங்களால் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதுகுறித்து அனைத்துக் கட்சியினர், வேட்பாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கண்ணன் கூறும்போது, கொரோனோ தொற்றுப் பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, ராஜபாளையம் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ண இரு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 8 மேஜைகள் அமைக்கப்பட்டு 22 சுற்றுகளாக வாக்குஎண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதேபோன்று தபால் வாக்குகளை எண்ணவும் இரு மேஜைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதேபோன்று வில்லிபுத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ண இரு அறைகள் ஒதுக்கப்பட்டு 45 சுற்றுகளாகவும் சிவகாசி தொகுதிக்கு 12 மேஜைகள் அமைக்கப்பட்டு 31 சுற்றுகளாகவும், திருச்சுழி தொகுதிக்கு இரு அறைகளில் 14 சுற்றுகளாகவும், விருதுநகர் தொகுதிக்கு இரு அறைகளில் 16 மேஜைகள் அமைக்கப்பட்டு 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும், சாத்தூர் தொகுதிக்கு 2 அறைகளில் 16 மேஜைகளில் 44 சுற்றுகளாகவும், அருப்புக்கோட்டை தொகுதிக்கு 2 அறைகளில் 16 மேஜைகளில் 20 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு சராசரியாக 45 நிமிடங்கள் ஆகும்.

கொரோனோ கட்டுப்பாடுகளால் போதிய இடைவெளியில்தான் எண்ணிக்கை மேஜைகள் அமைக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் கட்சியினர் கூடுதல் முகவர்களை நியமித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் மேஜைகள் அமைக்கப்பட்டு கூடுதல் சுற்றுகள் காரணமாக 2 நாட்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்காக 7 தொகுதிகளிலும் இம்மாதம் 29,30-ம் தேதிகளில் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் அமைக்கப்படும். அதில் முகவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் இதன் மூலம் வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனோ பரவலைத் தடுக்க முடியும் என்று கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், எஸ்பி பெருமாள் மற்றும் வேட்பாளர்கள், கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 21 April 2021 2:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....