/* */

விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
X

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் மாவட்ட வடகிழக்கு பருவமழை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் காமராஜ்.தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி முன்னிலையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் மாவட்ட வடகிழக்கு பருவமழை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் பெய்த மழை அளவு குறித்தும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து குறித்தும், நீர் வெளியேறும் அளவும் மேற்கண்ட அணைகளின் மூலம் எந்தெந்த கண்மாய்களுக்கு நீர் செல்கிறது என்பது குறித்தும், மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் நீர் இருப்பு குறித்தும் கேட்டறிந்து, அனைத்து நீர் பிடிப்பு பகுதிகள், கண்மாய்கள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கும், தேவையான அளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்து கொள்ளவும், அணைகளில் சேமிக்கப்படும் நீர் மற்றும் உபரி நீரை முறையாக கண்மாய்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவ மழையில் உயிரிழந்தவர்களின் விபரம் குறித்தும், மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் விபரம் குறித்தும், அறுவடை நிலையில் உள்ள பயிர்களின் விபரம் குறித்தும், மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களின் விபரம் குறித்தும் கேட்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக சீரான மின்விநியோகம் அனைவருக்கும் கிடைப்பதற்கும், மாவட்டத்தில் உள்ள சேதமடைந்த மின்கம்பிகளை கண்டறிந்து, வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், தீயணைப்பு துறை மூலமாக மீட்புப்பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் இருப்பு குறித்தும், பணியாளர்கள் இருப்பு குறித்தும், தீயணைப்புத் துறை வாகனங்கள் குறித்தும் கேட்டறிந்து, வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்கு தீயணைப்புத்துறை வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்து கொள்ளவும் அறிவுறுத்தினார். கால்நடைத்துறை மூலமாக மாவட்டத்தில் உள்ள மொத்த கால்நடைகளின் விபரம் குறித்தும், மழை காலங்களில் கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்காக தேவையான அளவு மருந்துகள், கால்நடை மருத்துவர்கள், தடுப்பூசிகள் இருப்பு வைத்து கொள்வதற்கும்,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விபரங்கள் குறித்தும் மழைகாலங்களில் தொடர்ந்து பொதுமக்களுக்கு சீரான அளவில் குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடடிவக்கைகள் எடுக்குமாறும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கட்டடங்களையும் கண்காணித்து, மழைக்காலங்களில் சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் வகுப்பறைகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், வட்டாரப் போக்குவரத்துத் துறை மூலமாக மழைகாலங்களில் போதுமான அளவு போக்குவரத்து பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார். மழைகாலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் நீரை உடனடியாக கண்டறிந்து அகற்றவும், மாபெரும் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கும், கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருந்து பொருட்கள் ஆகியவை போதுமான அளவு இருப்பு வைத்து கொள்ளவும், மழைக்காலத்தில் பரவும் நோய்களான டெங்கு நோய் தொடர்பான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதனை தடுப்பதற்கு ஏதுவாக தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அதனை உடனடியாக அகற்றுவதற்கும், மழைகாலங்களில் சூடான தண்ணீர் பருகவும், காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க செல்வதற்கு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், மருத்துவத்துறை மூலம் அனைத்து மருத்துவமனை களுக்கும் போதுமான அளவு படுக்கை வசதி இருப்பு வைத்து கொள்ளவும், நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட அளவில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித்துறை என அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும், மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் தாமதமின்றி வழங்க வேண்டும்

தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும், பொதுமக்களுக்கு அனைத்து நிவாரணப்பொருட்களும் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், மழைக்காலங்களில் நோய்த்தொற்று, டெங்கு போன்றவை பரவாமல் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், நீர் வழி பாதைகளில் ஏதேனும் அடைப்பு இருந்தால் அதனை உடனடியாக கண்டறிந்து அகற்றுவதற்கும், சம்பந்த அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை காமராஜ் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சார் ஆட்சியர் பிரிதிவிராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Nov 2021 3:20 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  6. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  7. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  8. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  9. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  10. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!